/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ம.க., ஓட்டுகளையும் அள்ள வேண்டும் 'மாஜி'யின் உடன்பிறப்பு ஆலோசனை
/
பா.ம.க., ஓட்டுகளையும் அள்ள வேண்டும் 'மாஜி'யின் உடன்பிறப்பு ஆலோசனை
பா.ம.க., ஓட்டுகளையும் அள்ள வேண்டும் 'மாஜி'யின் உடன்பிறப்பு ஆலோசனை
பா.ம.க., ஓட்டுகளையும் அள்ள வேண்டும் 'மாஜி'யின் உடன்பிறப்பு ஆலோசனை
ADDED : மார் 25, 2024 05:21 AM
வானுார் சட்டசபை தொகுதியில் பா.ம.க., ஓட்டுகளையும் அள்ள வேண்டும் என அ.தி.மு.க., மாஜியின் உடன்பிறப்பு இளைஞர்களைத் திரட்டி ஆலோசனை வழங்கி வருகிறார்.
விழுப்புரம் போக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள வி.சி., வேட்பாளர் ரவிக்குமார் பானை சின்னத்திலும், அ.தி.மு.க., வேட்பாளராக பாக்கியராஜ், பா.ஜ., கூட்டணியில் உள்ள பா.ம.க., முரளி சங்கரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
தொகுதியில் மும்முனை போட்டி நிலவி வருவதால், ஓட்டுகள் சிதறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த முறை அ.தி.மு.க.,வினர் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்புடன் தேர்தல் பணியை துவக்கியுள்ளனர்.
தற்போது, முன்னாள் அமைச்சர் சண்முகத்தின் அண்ணனும், அ.தி.மு.க., அதிகாரப்பூர்வ 'டிவி'யின் நிர்வாக இயக்குனரான ராதாகிருஷ்ணன், இளைஞர்களின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
அதில், தேர்தலில் பணியாற்றுவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கும் அவர், இந்த தேர்தலில் நமக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். தேர்தல் நேரம் என்பதால் யாரிடமும் பிரச்னை வைத்துக் கொள்ளக்கூடாது.
பா.ம.க.,வின் ஓட்டுகள் நமக்கு கிடைக்க உழைக்க வேண்டும். ஒவ்வொரு இளைஞர்களும், ஐந்து ஓட்டுகளைப் பெற்றுத் தர வேண்டும் என அறிவுறுத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் காலை முதல் மதியம் வரை வானுார் ஒன்றியத்தில் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, வானுார் மற்றும் பெரும்பாக்கம் கிராமத்தில் இளைஞர்களை திரட்டி ஆலோசனை நடத்தியுள்ளார்.
-நமது நிருபர்-

