/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திரவுபதி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
/
திரவுபதி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
திரவுபதி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
திரவுபதி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
ADDED : ஜூலை 12, 2024 11:05 PM

விழுப்புரம்: வளவனுார் குமாரபுரி திரவுபதி அம்மன் கிருஷ்ணசாமி கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனையொட்டி, நேற்று காலை 7:30 மணிக்கு கோவிலில் ஸ்ரீ பார்த்தசாரதி கிருஷ்ணசுவாமிக்கு துவாஜாரோகணம் செய்து, 9:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதனையடுத்து, அம்மனுக்கு ஆராதனை நடந்தது. இரவு அலங்கரிக்கப்பட்ட திரவுபதி அம்மன் இந்திர விமானத்தில் வீதியுலா நடந்தது.
தொடர்ந்து இன்று 12ம் தேதி சிம்ம வாகனம், 13ம் தேதி பின்னக்கிளை, 14ம் தேதி நாக வாகனம், 15ம் தேதி கருட வாகனத்திலும் சுவாமி ஊர்வலம் நடக்கிறது. 17ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. முக்கிய விழாவான 19ம் தேதி காலை தேரோட்டமும், பிற்பகல் தீமிதி விழாவும் நடக்கிறது.
உற்சவத்தையொட்டி, தினமும் இரவு 7:00 மணிக்கு அறிவுடை நம்பியின் பாரத உபன்யாசம் நடக்கிறது. வளவனுார் குமாரபுரி மக்கள், ஆலய வழிபாட்டு மன்றத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.