/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அகத்தீஸ்வரன் கோவிலில் பால ஸ்தாபனம் விழா
/
அகத்தீஸ்வரன் கோவிலில் பால ஸ்தாபனம் விழா
ADDED : ஏப் 27, 2024 12:30 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அகத்தீஸ்வரர் கோவிலில் 65 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் செய்ய பாலஸ்தாபனம் விழா நடந்தது.விக்கிரவாண்டி மெயின் ரோட்டில் தர்மஸத வர்த்தினி உடனுறை அகத்தீஸ்வரன் கோவில் நூறு ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்தது. 65 ஆண்டுகளுக்கு முன்னர் கும்பாபிேஷகம் நடந்த இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய பொதுமக்கள் முடிவு செய்து நேற்று பாலாயண வேள்வி நடந்தது. நேற்று முன்தினம் மாலை கணபதி ஹோமத்துடன் துவங்கிய யாகசாலை பூஜை நேற்று காலை 10. 10 மணிக்கு முடிவடைந்து கும்ப புறப்பாடு துவங்கி சுவாமிகள் மீது பாலஸ்தாபன புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்து பின்னர் மகா தீப ஆராதனை நடந்தது. விக்கிரவாண்டி ரவி குருக்கள் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடந்தது.
விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற கிராம பொதுமக்கள் திரளாக விழாவில் பங்கேற்றனர்.கோவில் அறங்காவலர் ரங்கநாதன் தலைமையில் திருப்பணி குழுவினர் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் விழாவில் பங்கேற்றனர்.

