ADDED : மார் 15, 2025 06:46 AM

திண்டிவனம்: தமிழக அரசின் 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள பல்வேறு இடங்களில் அகன்ற திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
திண்டிவனம் நகராட்சி சார்பில் மேம்பாலத்தின் கீழே பஸ் நிலையத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், நகராட்சி கமிஷனர் குமரன், துணைத் தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், பொறியாளர் சரோஜா, உதவி வருவாய் அலுவலர் பழனி, உதவி பொறியாளர் கலைவாணி, கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், சின்னசாமி, பிர்லாசெல்வம், பாஸ்கர், முகமதுஷபி, சரவணன், முன்னாள் தி.மு.க., நகர செயலாளர் கபிலன், பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மயிலம்
கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பு, மயிலம் சன்னதி வீதிக்கு செல்லும் வழி ஆகிய இடங்களில் அகன்ற திரையில் ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் சேகர், சேர்மன் யோகேஸ்வரி, முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, ஒன்றிய செயலாளர்கள் சேதுநாதன், மணிமாறன், செழியன், ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வகுமார், பரிதா சம்சுதீன், நிவேதிதா ஜெய்சங்கர், மாவட்ட சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் அன்சாரி, கூட்டேரிப்பட்டு முன்னாள் செயலாளர் ஏழுமலை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் எல்.இ.டி., திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா கோரிக்கையின் பேரில் தொகுதியில் புதிய அரசு கலைகல்லுாரி துவக்கப்படும் என்ற அறிவிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்த்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் ேஷக் லத்தீப், இளநிலை உதவியாளர் ராஜேஷ், துணை சேர்மன் பாலாஜி, நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, கவுன்சிலர்கள் சுதா, பிரியா, வெண்ணிலா, துப்புரவு மேற்பார்வையாளர் ராமலிங்கம், நகர தி.மு.க., செயலாளர் நைனாமுகமது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.