/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குண்டும், குழியுமான வி.கே.டி., சாலையில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ்:

ADDED : ஆக 11, 2024 06:57 AM

விழுப்புரம், : சென்னையில் இருந்து நேற்று மாலை தஞ்சாவூருக்கு, கும்பகோணம் கோட்ட அரசு பஸ் புறப்பட்டது. 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இரவு 9:00 மணியளவில், விழுப்புரம் அடுத்த கப்பியாம்புலியூர் வி.கே.டி., தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, நெடுஞ்சாலையில் உள்ள 'மெகா சைஸ்' பள்ளத்தில் இறங்கியதில், கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது.
உடன் டிரைவர், சாதுரியமாக செயல்பட்டு சென்டர் மீடியனில் பஸ்சை ஏற்றி நிறுத்தினார். பயணிகள் அலறினர்.
இருப்பினும், அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதனைத் தொடர்ந்து பஸ் புறப்பட்டு சென்றது.
வி.கே.டி., சாலையில் கப்பியாம்புலியூர் - கண்டரக்கோட்டை வரை உள்ள மெகா பள்ளங்களால், பெரும் விபத்து நடப்பதற்கு முன், சாலையை சீரமைத்திட தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.