/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குட்கா விற்ற பங்க் கடைக்காரர் கைது
/
குட்கா விற்ற பங்க் கடைக்காரர் கைது
ADDED : மார் 28, 2024 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா விற்ற பங்க் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் உட்கோட்ட பகுதியில், குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரோஷணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து, திண்டிவனம் - செஞ்சி ரோடு இருதயபுரம் பகுதியில் பங்க் கடை வைத்திருக்கும் பட்டுராஜா, 57; என்பவரது கடையில் சப் இன்ஸ்பெக்டர் குருபரன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது கடையில் குட்கா பதுக்கி விற்றது தெரியவந்தது. உடன், 614 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து பட்டுராஜாவை கைது செய்தனர்.

