/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாற்றுத் திறனாளிகளுக்கு பஸ் பாஸ் புதுப்பிக்கும் முகாம்
/
மாற்றுத் திறனாளிகளுக்கு பஸ் பாஸ் புதுப்பிக்கும் முகாம்
மாற்றுத் திறனாளிகளுக்கு பஸ் பாஸ் புதுப்பிக்கும் முகாம்
மாற்றுத் திறனாளிகளுக்கு பஸ் பாஸ் புதுப்பிக்கும் முகாம்
ADDED : ஜூன் 04, 2024 05:28 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பஸ் பாஸ் புதுப்பிக்கும் முகாம் வரும் 20 மற்றும் 21ம் தேதிகளில் நடக்கிறது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் அரசு பஸ்களில் கட்டணமின்றி மாவட்டம் முழுதும் செல்ல இலவச பஸ் பயண அட்டை ஒவ்வொரு நிதியாண்டும் புதுப்பித்து வழங்கப்படுகிறது.
அதன்படி, இந்த நிதியாண்டிற்கு இலவச பஸ் பயண அட்டையை புதுப்பிக்கும் முகாம் வரும் 20 மற்றும் 21ம் தேதிகளில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பஸ் பயண அட்டை பெற்றோர், இந்த நாட்களில் நடைபெறும் முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், பாஸ்போர்ட் போட்டோ 2, ஆதார் கார்டு நகல், இலவச பஸ் பயண அட்டை அசல், நகல் ஆகியவற்றோடு பங்கேற்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.