/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 1,195 போலீசார் பாதுகாப்பு
/
இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 1,195 போலீசார் பாதுகாப்பு
இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 1,195 போலீசார் பாதுகாப்பு
இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 1,195 போலீசார் பாதுகாப்பு
ADDED : ஜூலை 13, 2024 12:11 AM
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று நடப்பதால், டி.ஐ.ஜி., தலைமையில் 1,195 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் 10ம் தேதி நடந்து முடிந்து, அதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விழுப்புரம் அடுத்த பனையபுரத்தில் உள்ள அரசு பள்ளி ஓட்டு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு, இன்று காலை 7:00 மணிக்கு ஓட்டு எண்ணும் பணி தொடங்குகிறது. இதற்காக, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., திஷாமித்தல், எஸ்.பி., தீபக்சிவாச் தலைமையில், 4 ஏ.டி.எஸ்.பி.,க்கள், 7 டி.எஸ்.பி.,க்கள், 28 இன்ஸ்பெக்டர்கள், 86 சப் இன்ஸ்பெக்டர்கள், 300 தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் உள்ளிட்ட 1,195 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களுடன், துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படையினர் 16 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.