ADDED : செப் 28, 2026 10:01 AM

அ நிறம் | அளவு
மயிலம்: மயிலம் அடுத்த பாதிராபுலியூர் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் என்.எஸ்.எஸ்., திட்ட சிறப்பு முகாம் தளவாளப்பட்டில் துவங்கியது.
முகாமிற்கு தலைமை ஆசிரியர் குமரவேல் தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் பஞ்சாட்சரம், ஆங்கில ஆசிரியை ஜெயப்பிரியா முன்னிலை வகித்தனர். சென்னை பல்கலைக்கழக துணைப் பதிவாளர் தமிழ்வாணன், முதுகலை தமிழாசிரியை அஞ்சலாட்சி பழனி சிறப்புரையாற்றினர். 7 நாள் நடக்கும் சிறப்பு முகாமில் மாணவ, மாணவியர்கள் மரம் நடுதல், சாலைகளை சீரமைத்தல், கோவில் வளாகங்களை துாய்மைப்படுத்துதல் போதை விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட உள்ளனர்.
