/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மதுபாட்டில்களுடன் கார் பறிமுதல் பறக்கும் படை சோதனையில் சிக்கியது
/
மதுபாட்டில்களுடன் கார் பறிமுதல் பறக்கும் படை சோதனையில் சிக்கியது
மதுபாட்டில்களுடன் கார் பறிமுதல் பறக்கும் படை சோதனையில் சிக்கியது
மதுபாட்டில்களுடன் கார் பறிமுதல் பறக்கும் படை சோதனையில் சிக்கியது
ADDED : ஏப் 02, 2024 05:15 AM

வானுார் : புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு காரில் 180 மதுபாட்டில்கள் கடத்திய இருவரை பறக்கும் படை அதிகாரிகள் பிடித்து, மதுவிலக்கு அமல் பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
ஆரோவில் அடுத்த குயிலாப்பாளையம் - பொம்மையார்பாளையம் சந்திப்பில் புள்ளியியல் துறை ஆய்வாளர் நசீர்தீன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த இண்டிகா காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், 180 குவாட்டர் பாட்டில்கள் தமிழக பகுதிக்கு கடத்தப்பட்டது தெரியவந்தது.
காரில் இருந்த இருவரிடமும் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம் சேத்பேட் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து, 27; ஹரிகுமார், 47; என்பதும், உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக மதுபாட்டில்கள் கடத்திச் சென்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து, காரையும், மது பாட்டில்களையும் வானுார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேசன் தலைமையில், பறிமுதல் செய்து, கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.