ADDED : ஜூலை 02, 2024 04:47 AM

திண்டிவனம்: கார் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் ஆர்.சி.காம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர்மார்டின் மெர்சிலின், 40; இவர் மேம்பாலத்தின் கீழ் உள்ள ஆட்டோ ஸ்டேண்டு அருகே டிராவல்ஸ் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு,மார்டின் மெர்சிலின் காரில்டிரைவர் அல்தாப் அலி பணியில் இருந்தார்.
அப்போது, திண்டிவனம் கிடங்கல்(2) ராஜன்தெருவை சேர்ந்த கண்ணன் மகன் சேட்டு(எ)பிரதீப்குமார், 27; முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஸ்டேண்டில் தகராறு செய்தார்.அதனை கண்டித்துகார் டிரைவர் அல்தாப் அலி, கிடங்கல் (2) பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெசிகுமார், 42; ஆகியோரை தாக்கி, காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார்.
இதுகுறித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்கு பதிந்து கொலை முயற்சி வழக்கு பதிந்து சேட்டுவைகைது செய்தனர்.