/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கார் கண்ணாடி உடைப்பு: 2 பேர் கைது
/
கார் கண்ணாடி உடைப்பு: 2 பேர் கைது
ADDED : ஜூலை 22, 2024 11:57 PM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.,வினர் கார் கண்ணாடியை உடைத்த வழக்கில் 28 பேர் மீது வழக்கு பதிந்து 2 பேரை போலீசார் கைது செய்தனர் .
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலின் போது கடந்த 1ம் தேதி அன்று காணை அடுத்த அத்தியூர் திருக்கையில் பா.ம.க., மாநில தலைவர் அன்புமணி பிரசாரத்திற்கு வந்த போது ஏற்பட்ட தகராறில் தி.மு.க., கொடி கட்டிய கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தப்பட்டது. மேலும், தி.மு.க., தேர்தல் பிரசார அலுவலகத்திலிருந்த சேர்கள் உடைக்கப்பட்டன.
இது குறித்த புகாரின் பேரில் கஞ்சனுார் போலீசார், 28 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில், நேற்று காலை அத்தியூர் திருக்கையைச் சேர்ந்த இளங்கோவன், 48; திருநாவுக்கரசு, 36 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.