/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் தேர்தல் விதிமீறல் அ.தி.மு.க.,வினர் 200 பேர் மீது வழக்கு

ADDED : மார் 28, 2024 11:08 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் அனுமதியின்றி கட்சி கொடிகள், பேனர்கள் வைத்ததாக அ.தி.மு.க.,வினர் 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
விழுப்புரத்தில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில் நேற்று முன்தினம் இரவு தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது.
விழுப்புரம் கரும்பு விவசாயிகள் மண்டபத்தில் நடந்த கூட்டத்தில், அனுமதியின்றி அ.தி.மு.க., சார்பில், மண்டபம் முன்பு 8 கொடி கம்பங்கள், 2 பேனர்கள் போன்றவை வைக்கப்பட்டிருந்தது.
இது குறித்து, விழுப்புரம் தேர்தல் பறக்கும்படை அலுவலர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் அ.தி.மு.க., நகர செயலர் ராமதாஸ் உள்ளிட்ட 200 அ.தி.மு.க., வினர் மீது, விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்தனர்.