/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இரு தரப்பு மோதல் 3 பேர் மீது வழக்கு
/
இரு தரப்பு மோதல் 3 பேர் மீது வழக்கு
ADDED : செப் 08, 2024 06:29 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில், ஏற்பட்ட மோதலில் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன், 34; இவரிடம், பக்கத்து வீட்டைச் சேர்ந்த முனியப்பன் குடும்பத்தினர் கடந்த 2022ம் ஆண்டு முதல் சிறிது, சிறிதாக 2.50 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளனர்.
இந்த பணத்தை திரும்ப தராததால், நேற்று முன்தினம் லோகேஸ்வரன், பணத்தை கேட்ட போது முனியப்பன், இவர் மனைவி அபிநயா, மகன்கள் தம்பிதுரை, சிவானந்தன் ஆகியோர் அவரை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். தொடர்ந்து லோகேஸ்வரனும் அவர்களை தாக்கியுள்ளனர்.
இரு தரப்பு புகார்களின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் முனியப்பன், லோகேஸ்வரன் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.