/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அனுமதியின்றி பேனர் 4 பேர் மீது வழக்கு
/
அனுமதியின்றி பேனர் 4 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 16, 2024 06:32 AM
விழுப்புரம்: விழுப்புரம், வளவனுார் மற்றும் காணை பகுதியில் அனுமதியின்றி பேனர் வைத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.
வளவனுார் அடுத்த ராம்பாக்கம் கிராமத்தில் நேற்று முன்தினம் அனுமதியின்றி போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவிற்காக பேனர் வைத்த அதே கிராமத்தைச் சேர்ந்த நவின், விஜி ஆகியோர் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்தனர்.
இதேபோன்று, விழுப்புரம் காந்தி சிலையருகே தேர்தல் விதிமுறை மீறி பழைய கோர்ட் சாலையில் தி.மு.க., சார்பில் பேனர் வைத்த அகமது, 54; என்பவர் மீது டவுன் போலீசார் வழக்குப் பதிந்தனர்.
மேலும், காணை பஸ் நிறுத்தத்தில் அனுமதியின்றி கட்சிக் கொடி கட்டிய கோழிப்பட்டு தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் குமார் மீது காணை போலீசார் வழக்குப் பதிந்தனர்.