/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முன்விரோத தகராறு 5 பேர் மீது வழக்கு
/
முன்விரோத தகராறு 5 பேர் மீது வழக்கு
ADDED : செப் 01, 2024 04:10 AM
விழுப்புரம், : விழுப்புரத்தில் முன்விரோத தகாறில், ரியல் எஸ்டேட் உரிமையாளரைத் தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம், விராட்டிக்குப்பம் ரோட்டைச் சேர்ந்தவர் உசேன், 48; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக இதே பகுதியில் உள்ள போதிதர்மன் நகரில் உள்ள இடத்தை அப்பகுதியைச் சேர்ந்த ராஜா, 56; முத்து, 43; கணேஷ், 42; சுரேஷ், 40; ஆகியோர் கேட்டுள்ளனர்.
இந்த இடத்தை, உசேன் வேறு நபருக்கு கிரயம் செய்ததால், இவர்களுக்குள் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் ராஜா உட்பட 4 பேரும் சேர்ந்து உசேனை தாக்கினர்.
இரு தரப்பு புகார்களின் பேரில், ராஜா, உசேன் உட்பட 5 பேர் மீது விழுப்புரம் மேற்கு போலீசார், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.