/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அனுமதியின்றி கட்சிக் கொடி கம்பம் நட்டவர் மீது வழக்கு
/
அனுமதியின்றி கட்சிக் கொடி கம்பம் நட்டவர் மீது வழக்கு
அனுமதியின்றி கட்சிக் கொடி கம்பம் நட்டவர் மீது வழக்கு
அனுமதியின்றி கட்சிக் கொடி கம்பம் நட்டவர் மீது வழக்கு
ADDED : மார் 21, 2024 11:54 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் சுப நிகழ்ச்சிக்காக, அனுமதியின்றி கட்சிக் கொடி கம்பம் நட்டவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விக்கிரவாண்டி அடுத்த ஆசாரங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்பெருமாள், 40; இவரது மகளின் மஞ்சள் நீராட்டு விழா, நேற்று முன்தினம் விழுப்புரம் முத்தாம்பாளையம் தனியார் மண்டபத்தில் நடந்தது.
தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில், அனுமதியின்றி மண்டபத்தின் வெளியே, பா.ம.க., கொடிகளையும், பா.ஜ., கொடிகளையும் தற்காலிக கம்பங்களில் நட்டனர்.
இதுகுறித்து, தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் நேரில் சென்று, கட்சி கொடிக்கம்பங்களை அகற்றி, பெருமாள் மீது வழக்குப் பதிந்தனர்.