/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தனியார் நிறுவனத்திற்கு தீ வைத்த 10 பேர் மீது வழக்கு
/
தனியார் நிறுவனத்திற்கு தீ வைத்த 10 பேர் மீது வழக்கு
தனியார் நிறுவனத்திற்கு தீ வைத்த 10 பேர் மீது வழக்கு
தனியார் நிறுவனத்திற்கு தீ வைத்த 10 பேர் மீது வழக்கு
ADDED : மார் 10, 2025 05:52 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே முன்விரோதம் காரணமாக தனியார் நிறுவனத்திற்கு தீ வைத்த 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த வேடம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன், 53; இவர், அப்பகுதியில் பிளாஸ்டிக் நிறுவனம் வைத்துள்ளார். இங்கு பணிபுரிந்த திருப்பச்சாடிமேட்டைச் சேர்ந்த நரேன் என்பவரை கடந்த 6 மாதங்களுக்கு முன் பணியிலிருந்து கண்ணன் நீக்கியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த நரேன், அவரது ஆதரவாளர்கள் சந்திரமோகன், சங்கரநாராயணன், கலியமூர்த்தி, சேகர், காமராஜ், முருகன், மணிகண்டன், ஆசைதம்பி, விநாயகமூர்த்தி ஆகியோரோடு சேர்ந்து, கடந்த 23ம் தேதி நிறுவனத்திற்கு தீ வைத்தனர்.
இதில், இயந்திரங்கள், மின்மோட்டார்கள், கேபிள் பேனல்கள் உட்பட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் நரேன் உட்பட 10 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.