/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண் வி.ஏ.ஓ.,வை தாக்கிய வழக்கு: மாவட்ட தி.மு.க., கவுன்சிலர் கைது
/
பெண் வி.ஏ.ஓ.,வை தாக்கிய வழக்கு: மாவட்ட தி.மு.க., கவுன்சிலர் கைது
பெண் வி.ஏ.ஓ.,வை தாக்கிய வழக்கு: மாவட்ட தி.மு.க., கவுன்சிலர் கைது
பெண் வி.ஏ.ஓ.,வை தாக்கிய வழக்கு: மாவட்ட தி.மு.க., கவுன்சிலர் கைது
ADDED : ஏப் 27, 2024 04:43 AM

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த ஆ.கூடலூர் கிராமத்தில், கடந்த 19ம் தேதி நடந்த தேர்தல் அன்று அங்குள்ள அரசு பள்ளி ஓட்டுச்சாவடியில், விழுப்புரத்தை சேர்ந்த வி.ஏ.ஓ., சாந்தி, 40; பணியில் இருந்தார்.
இரவு ஓட்டுப்பதிவு முடிந்து, 8.30 மணிக்கு, அங்கு பணியில் இருந்தவர் களுக்கு வி.ஏ.ஓ., சாந்தி, முகையூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் டிபன் வாங்கி வந்துகொடுத்துள்ளார்.
அப்போது, ஓட்டுச்சாவடிக்கு வந்த, தி.மு.க., மாவட்ட கவுன்சிலரான, ஆ.கூடலூரை சேர்ந்த ராஜிவ்காந்தி, 45; ஓட்டலில், நான் வாங்கி வைத்திருந்த உணவு பொட்டலங்களை வாங்கி வந்து, நீ ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு கொடுத்துவிட்டாயா என கூறி, வி.ஏ.ஓ., சாந்தியிடம் தகராறு செய்து வி.ஏ.ஓ., சாந்தியை கன்னத்தில் அறைந்தார்.அங்கிருந்தவர்கள் தடுத்து அவரை அனுப்பினர். இதன் பிறகு, போதையில் திரும்பி வந்த ராஜிவ்காந்தி, மீண்டும் வி.ஏ.ஓ., சாந்தியிடம் தகராறு செய்து, மொபைல் போனை பறித்துச்சென்றார்.
வி.ஏ.ஓ., சாந்தி, ஓட்டுச்சாவடியில் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் மற்றும் அலுவலர்கள் சமாதானப்படுத்தியதையடுத்து, அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து, வி.ஏ.ஓ., சாந்தி காணை போலீசில் புகார் அளித்தார்.
இது குறித்து, பெண்கள் மீதான வன்கொடுமை, அரசு பணி செய்யவிடாமல் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜிவ்காந்தி,45; அவரது தந்தை ராஜேந்திரன்,62; ஆகியோர் மீது காணை போலீசார், ஏப்.20ம் தேதி வழக்கு பதிந்தனர்.
இதனையடுத்து, நேற்று காலை, ராஜிவ்காந்தியை காணை போலீசார் கைது செய்து, விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, வேடம்பட்டு சிறையில் அடைத்தனர்.

