ADDED : மே 18, 2024 06:08 AM

அ நிறம் | அளவு
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் சித்திரை சாகை வார்த்தல் விழா நடந்தது.
விழாவையொட்டி, காலை 9:00 மணிக்கு மூலவர் ரேணுகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
மதியம் 11:00 மணிக்கு, ஏரிக்கரையில் சக்தி கரகம் ஜோடித்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
பெண்கள் கூழ் கலயங்களுடன் ஊர்வலமாக வந்து, மதியம் 1:00 மணிக்கு கோவிலில், படையலிட்டு, சாகை வார்த்தல் நடந்தது.
தொடர்ந்து இரவு, உற்சவர் அம்மன் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
