/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓட்டு எண்ணும் மையத்தில் சி.சி.டி.வி., கேமரா செயல்பாடு: தேர்தல் அலுவலர் ஆய்வு

ADDED : மே 05, 2024 06:04 AM

விழுப்புரம் : விழுப்புரம் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில் உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கண்காணிக்கும் சி.சி.டி.வி., கேமரா செயல்பாடுகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் (தனி) லோக்சபா தொகுதி தேர்தல் ஓட்டுப்பதிவு கடந்த 19ம் தேதி நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்த பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், ஓட்டு எண்ணும் மையமான விழுப்புரம் அரசு கலை கல்லுாரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்போடு உள்ள மையத்தில் சில சி.சி.டி.வி., கேமராக்கள் நேற்று முன்தினம் 30 நிமிடங்கள் வேலை செய்யாமல் போனது. இதை தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் பழுது நீக்கியதோடு, கூடுதலான கேமராக்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவின் பேரில் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை, நேற்று மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர், கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் போலீசாரின் வருகை பதிவேட்டையும் ஆய்வு செய்தார். எஸ்.பி., தீபக் சிவாச் உட்பட அலுவலர்கள் சிலர் உடனிருந்தனர்.