நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானூர் : திருச்சிற்றம்பலம் எல்லை காளியம்மன் கோவிலில், ஆடி மாதத்தையொட்டி, செடல் மற்றும் தேர் திருவிழா நடந்தது.
வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கிராமத்தில், எல்லை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 27ம் ஆண்டு ஆடி மாத திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவையொட்டி கடந்த 4ம் தேதி இரவு 12;00 மணிக்கு காப்பு கட்டுதலும், நேற்று முன்தினம் இரவு 7;00 மணிக்கு பூ பல்லக்கில் அம்மன் வீதியுலாவும் நடந்தது. நேற்று காலை 10;00 மணிக்கு செடல், தேர் திருவிழா நடந்தது. விழாவில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு அலகு குத்தி நேர்த்தி கடனை செலுத்தினர். தொடர்ச்சியாக, மதியம் 12;00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.