ADDED : ஜூலை 08, 2026 07:04 PM
அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் 2027ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.
விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த பயிற்சிக்கு தாசில்தார் மகாதேவன் தலைமை தாங்கினார். சமூக நல பாதுகாப்பு தனி தாசில்தார் வேல்முருகன், தேர்தல் துணை தாசில்தார் பாரதிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுநிலை வருவாய் அலுவலர் ரேவதி வரவேற்றார்.
வட்டார வள மைய அலுவலர்கள் முகமது அலி, சிலம்பரசன் ஆகியோர் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த பயிற்சி அளித்தனர். மக்கள் கணக்கெடுப்பு தொகை தொழில்நுட்ப உதவியாளர்கள் சவுமியா, சிலம்பரசன் மற்றும் விக்கிரவாண்டி வட்டத்திலுள்ள ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்றனர்.
