தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் : கலெக்டர் திடீர் ஆய்வு 

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் : கலெக்டர் திடீர் ஆய்வு 

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் : கலெக்டர் திடீர் ஆய்வு 


ADDED : ஆக 02, 2026 08:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2026 08:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம், ஆக. 3–

விழுப்புரம் நகராட்சி பகுதியில் நடந்த வீட்டு பட்டியல் கணக்கெடுப்பு பணிகள் நியமிக்கபட்ட கணக்கெடுப்பாளர்கள் மூலம் கணக்கெடுப்பு பணிகள் நடப்பதை, கலெக்டர் ஆய்வு செய்தார்.

நாட்டின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமையான டிஜிட்டல் முறையில் இரு கட்டங்களாக நடக்கிறது. தமிழகத்தில் முதற்கட்டமாக வீட்டு பட்டியல், வீட்டு வசதி கணக்கெடுப்பு பணிகள் கடந்த 17 ம் தேதி முதல் வரும் ஆக., 30 ம் தேதி வரை மொத்தம் 45 நாட்கள் நடக்கிறது

இதில், கடந்த 17 ம் தேதி முதல் 31ம் தேதி வரை 15 நாட்கள் பொதுமக்கள் இணையதளம் மூலம் சுய கணக்கெடுப்பு விபரங்களை பதிவு செய்தனர்.

தொடர்ந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு முதற்கட்டத்தில் வீடுகள் கணக்கெடுப்பு நேற்று முதல் துவங்கி வரும் 30 ம் தேதி வரை 30 நாட்கள் நடக்கிறது. விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட அக்ரி நகரில், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதை யொட்டி, வீட்டு பட்டியல் கணக்கெடுப்பு பணிகளுக்கு நியமிக்கப்பட்ட கணக்கெடுப்பாளர்கள் மூலம் கணக்கெடுப்பு பணிகள் நடப்பதை, கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரியதர்ஷினி, வருவாய் வட்டாட்சியர் யுவராஜ், நகராட்சி ஆணையர் ஷியாமளா உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us