/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு ஆர்ப்பாட்டம்
/
மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 02, 2024 02:07 AM
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லுாரில் மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.
விவசாய சங்க நிர்வாகிகள் ஹரிகிருஷ்ணன், தங்கவேல், ஏழுமலை, அண்ணாமலை, நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விவசாய விடுதலை முன்னணி மாநில குழு உறுப்பினர் அம்பேத்கர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில குழு உறுப்பினர் தாண்டவராயன், தமிழ்நாடு விவசாய சங்கம் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
விவசாயிகளுக்கு போதிய நிதியை ஒதுக்கவில்லை உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசைக் கண்டித்து பட்ஜெட் நகலை எரித்தனர்.