/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மத்திய மாவட்ட தி.மு.க., நலத்திட்டம் வழங்கல்
/
மத்திய மாவட்ட தி.மு.க., நலத்திட்டம் வழங்கல்
ADDED : மார் 12, 2025 10:09 PM

விழுப்புரம்; விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட காகுப்பம், கீழ்பெரும்பாக்கம், சேவியர் காலனி, பவர்ஹவுஸ் ரோடு உள்ளிட்ட இடங்களில் ஏழை, எளிய பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் சக்கரை, சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு, மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், நகர இளைஞரணி மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் சம்பத், நகர துணை செயலாளர் புருஷோத்தமன், மாவட்ட பிரதிநிதி நந்தா நெடுஞ்செழியன், கவுன்சிலர்கள் மணவாளன், ஜனனி தங்கம், அமுதா ஆறுமுகம், புல்லட் மணி, சாந்தராஜ், கோமதி பாஸ்கர், ஜெயந்தி மணிவண்ணன், கன்னிகா வெற்றிவேல், நவநீதம் மணிகண்டன், அன்சர் அலி, வசந்தா அன்பரசு, தீபா சம்பத், புனித சவேரியார் தேவாலயம் பங்கு தந்தை ஆரோக்கியதாஸ் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.