/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மத்திய தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
/
மத்திய தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
ADDED : மார் 04, 2025 12:11 AM

விழுப்புரம்,; விழுப்புரத்தில், மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், முன்னாள் சேர்மன் சம்பத், வழக்கறிஞர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., பேசுகையில், 'நடிகராக உள்ள ஒருவர் கட்சியை துவக்கி கோட்டைக்கு போக ஆசைப்பட்டுள்ளார். அவரது கனவும் வரும் தேர்தலில் தவிடுபொடியாகும்' என்றார்.
கூட்டத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடிட வேண்டும். வரும் தேர்தலில் விழுப்புரம், வானுார் தொகுதிகளில் தி.மு.க., வெற்றியை தலைமைக்கு சமர்பிக்க நிர்வாகிகள் சிறப்பாக பணிபுரிய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இளைஞரணி தினகரன், தொண்டரணி கபாலி, மாணவரணி ஸ்ரீவினோத் உட்பட பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.