/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஹோலி ஏஞ்சல் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 'சென்டம்'
/
ஹோலி ஏஞ்சல் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 'சென்டம்'
ADDED : மே 07, 2024 05:56 AM

மயிலம், : மயிலம் அடுத்த ரெட்டணை ஹோலி ஏஞ்சல் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இப்பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை 87 மாணவர்கள் எழுதினர். அனைவரும் தேர்ச்சி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் பழனியப்பன் பாராட்டினார்.
மாணவி ஜெயஸ்ரீ 600க்கு 567 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், மகாலட்சுமி 565, தீபிகா 557, தனுஷ் ஸ்ரீ 554 மதிப்பெண் பெற்றனர்.
மேலும் 500க்கு மேல் 33 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர். மாணவர் புருஷோத்தமன் விலங்கியல் பாடத்திலும், பரத் இயற்பியல் பாடத்திலும் 100க்கு100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 86 சதவீதம் பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தாளாளர்பழனியப்பன், முதுநிலை முதல்வர் அகிலா, பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் மாணவர்களை பாராட்டினர்.