/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண்ணிடம் செயின் பறிப்பு மர்ம நபர்களுக்கு வலை
/
பெண்ணிடம் செயின் பறிப்பு மர்ம நபர்களுக்கு வலை
ADDED : மே 30, 2024 05:12 AM
விழுப்புரம்: பைக்கில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 3 சவரன் நகையை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
புதுச்சேரி, உப்பளத்தை சேர்ந்தவர் பழனிராஜா,55; இவர் நேற்று தனது மனைவி காந்திமதியுடன், விழுப்புரம் அடுத்த சிந்தாமணியில் உள்ள உறவினர் வீட்டிற்கு பைக்கில் புறப்பட்டார். இரவு 8:30 மணிக்கு சிந்தாமணி மேம்பாலம் அருகே சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த 25 வயது மதிக்கத்தக்க இரு வாலிபர்கள், காந்திமதி கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் நகையை பறித்து சென்றனர்.
அதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்த பழனிராஜா மற்றும் காந்திமதியை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.