/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண்ணிடம் செயின் பறிப்பு; மர்ம நபருக்கு போலீஸ் வலை
/
பெண்ணிடம் செயின் பறிப்பு; மர்ம நபருக்கு போலீஸ் வலை
பெண்ணிடம் செயின் பறிப்பு; மர்ம நபருக்கு போலீஸ் வலை
பெண்ணிடம் செயின் பறிப்பு; மர்ம நபருக்கு போலீஸ் வலை
ADDED : மே 10, 2024 09:16 PM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணின் தாலிச் செயினைப் பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த பாப்பனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 43; கூலித் தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி, 40; இவர்கள், நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, பாப்பனப்பட்டிலிருந்து விழுப்புரம் நோக்கி பைக்கில் வந்தனர்.
அய்யங்கோவில்பட்டு ரயில்வே மேம்பாலம் அருகே வந்தபோது, பின்னால் பைக்கில் வந்த 30 வயது மதிக்கதக்க ஹெல்மெட் அணிந்துவந்த மர்ம நபர், புவனேஸ்வரியின் 6 சவரன் தாலிச் செயினை அறுத்துக் கொண்டு தப்பினார்.
இதில், நிலை தடுமாறிய வெங்கடேசனும், புவனேஸ்வரியும், கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.