ADDED : ஆக 07, 2026 08:13 PM
அ நிறம் | அளவு
மரக்காணம்: மரக்காணத்தில் வீடு புகுந்து செயினை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
மரக்காணத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 72; இவர், கடந்த மாதம் 8ம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது உறவினர் போல், பத்திரிகை வைப்பதாக கூறி வீட்டிற்குள் வந்துள்ளார்.
பின் முதியவரிடம் ஆசீர்வாதம் வாங்குவது போல் நடித்து பீரோவில் இருந்த 3 சவரன் செயினை திருடிச் சென்றுள்ளார்.
புகாரின் பேரில், மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவைக் கொண்டு அடையாளம் கண்டு நேற்று முன்தினம் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டைச் சேர்ந்த விக்னேஷ் கண்ணன், 48; என்பவரை போலீசார் கைது செய்து செயினை பறிமுதல் செய்தனர்.
