/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாணக்யா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
/
சாணக்யா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 10, 2024 09:17 PM

திண்டிவனம்: திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றனர்.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 126 மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் திவ்யா, ஜெயஸ்ரீ ஆகியோர் 500க்கு 494 மதிப்பெண் பெற்று பள்ளி மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்தனர். மாணவி அனுஷ்கா 490, குடியரசி 488 மதிப்பெண் பெற்று முறையே 2 மற்றும் 3ம் இடம் பிடித்தனர்.
480 மதிப்பெண்ணுக்கு மேல் 10 பேர், 475க்கு மேல் 10 பேர், 450க்கு மேல் 27 பேர், 400க்கு மேல் 40 பேர், 350க்கு மேல் 39 பேர் பெற்றுள்ளனர்.
கணிதத்தில் 43 பேர், அறிவியலில் 10 பேர், சமூக அறிவியலில் 4 பேர் 100க்கு100 எடுத்துள்ளனர்.
மாவட்ட அளவிலும், பள்ளி அளவிலும் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளை சாணக்யா பள்ளி குழுமத் தலைவர் தேவராஜ் கவுரவித்து பரிசு வழங்கினார். மாணவிகளின் பெற்றோர்கள், பள்ளி முதல்வர் அருள்மொழி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.