/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பசுமலை சுப்ரமணியர் கோவிலில் தேரோட்டம்
/
பசுமலை சுப்ரமணியர் கோவிலில் தேரோட்டம்
ADDED : மார் 25, 2024 05:16 AM
செஞ்சி: செஞ்சி அடுத்த மேல்ஒலக்கூர் பசுமலை சுப்ரமணியர் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது.
அதனையொட்டி, கடந்த 15ம் தேதி கொடியேற்றம் நடந்தது. இதையடுத்து தினமும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்து வந்தது.
19ம் தேதி மயில் வாகனத்திலும், 20ம் தேதி முத்து பிரபை வாகனத்திலும், 21ம் தேதி இந்திர விமானத்திலும் சுவாமி வீதியுலா நடந்தது. 22ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்தல் நேற்று முன்தினம் மாலை நடந்தது. திருத்தேரில் வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நேற்று தீர்த்தவாரி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

