/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
ADDED : செப் 08, 2024 06:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி பனமலைப்பேட்டையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.
முகாமிற்கு, அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.
காணை ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, துணைச் சேர்மன் வீரராகவன், மாவட்ட கவுன்சிலர் முருகன் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., சிவக்குமார் வரவேற்றார்.
தாசில்தார் யுவராஜ், காணை பி.டி.ஓ., ஞான சீனுவாசன், ஒன்றிய செயலாளர்கள் ராஜா, முருகன், துணை பி.டி.ஓ., அசோக்குமார், ஒன்றிய கவுன்சிலர் பாரதி, ஊராட்சி தலைவர் கல்யாண சுந்தரம் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.