/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ..
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ..
ADDED : ஆக 04, 2024 12:11 AM

மரக்காணம்: மரக்காணம் அடுத்த ஆலங்குப்பம் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.
முகாமிற்கு, மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் சேர்மன் ஷீலா தேவி, ஒன்றிய துணைச் சேர்மன் பழனி முன்னிலை வகித்தனர். மரக்காணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் வரவேற்றார். அமைச்சர் மஸ்தான் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார்.
தொடர்ந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். ஆலங்குப்பம், முன்னுார், வடநெற்குணம், ஏந்துார், ஆடவல்லி கூத்தன் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து 576 மனுக்கள் பெறப்பட்டது.
தாசில்தார் பாலமுருகன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.