/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நாளை மக்களோடு முதல்வர் திட்ட முகாம்
/
நாளை மக்களோடு முதல்வர் திட்ட முகாம்
ADDED : ஆக 01, 2024 07:17 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், நாளை 2ம் தேதி மக்களோடு முதல்வர் திட்ட முகாம் நடக்கிறது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம், கடந்த 16ம் தேதி துவங்கி, வரும் செப்டம்பர் 13ம் தேதி வரை 91 முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்கள் மனுக்களை நேரடியாக வழங்கலாம்.
நாளை 2ம் தேதி செஞ்சி ஒன்றியம், ஆலம்பூண்டி ஊராட்சியிலும், கோலியனுார் ஒன்றியம், கோலியனுார் ஊராட்சியிலும், மயிலம் ஊராட்சியிலும், ஆலங்குப்பம் ஊராட்சியிலும், வடமாலை ஊராட்சியில் நடைபெற உள்ளது.
முகாமில், பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை வழங்கிடலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.