/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சுடு நீரில் விழுந்து குழந்தை பலி
/
சுடு நீரில் விழுந்து குழந்தை பலி
ADDED : செப் 01, 2024 05:04 AM
திண்டிவனம் : திண்டிவனம் அருகே சுடு தண்ணீரில் விழுந்த இரண்டரை வயது குழந்தை இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனம் அடுத்த ரெட்டணை, அக்ரஹார தெருவில் வசிப்பவர் சுதாகர், 33; இவரது மனைவி வசந்தி. இவர் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்திலுள்ள தாய் வீட்டிற்கு சென்றிருந்தார்.
அங்கு கடந்த 27ம் தேதி இரண்டரை வயது குழந்தையான மகேஸ்வரன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு விறகு அடுப்பில் கொதித்து கொண்டிருந்த சுடு நீர் மகேஸ்வரன் மீது கொட்டியது.
இதில், படுகாயமடைந்த குழந்தை மகேஸ்வரன் சென்னையில் அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று முன்தினம் இரவு இறந்தது.
புகாரின் பேரில், ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.