/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சி.ஐ.டி.யூ.,வினர் 203 பேர் மீது வழக்கு
/
சி.ஐ.டி.யூ.,வினர் 203 பேர் மீது வழக்கு
ADDED : மே 03, 2024 10:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், - விழுப்புரத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பொதுகூட்டம் நடத்திய சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் உட்பட 203 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், கடந்த 1ம் தேதி மாலை, விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் சி.ஐ.டி.யூ.,சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் அனுமதியின்றி கூட்டம் நடத்திய சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் முத்துகுமரன், மாநிலச் செயலாளர் கோபிகுமார், மாவட்ட செயலாளர் மூர்த்தி உட்பட 203 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.