/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தூய்மை பணிக்கான உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி
/
தூய்மை பணிக்கான உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி
ADDED : பிப் 27, 2025 07:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி,; செஞ்சி ஒன்றியம் பாடிப்பள்ளம் ஊராட்சியில் துாய்மை பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மற்றும் உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது.
ஊராட்சி தலைவர் தாட்சாயினி கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் சஞ்சய் காந்தி வரவேற்றார்.
மண்டல ஏ.பி.டி.ஓ., ஷேக் முபாரக் துப்புரவு பணியாளர்களின் அவசியம், அவர்களின் கடமைகளை விளக்கி, துாய்மை பணிக்கான உபகரணங்களை வழங்கினார்.
துணை தலைவர் ஆனந்தன், சுகாதார பணியாளர் சத்தியா, தூய்மை பணியாளர்கள் முருகன், செல்வி, மலர்கொடி, மேரி, விருதாம்பாள், சசிகலா, அரியாத்தாள் கலந்து கொண்டனர்.

