/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாதாள சாக்கடையில் அடைப்பு; கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேடு
/
பாதாள சாக்கடையில் அடைப்பு; கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேடு
பாதாள சாக்கடையில் அடைப்பு; கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேடு
பாதாள சாக்கடையில் அடைப்பு; கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேடு
ADDED : ஜூன் 19, 2024 01:17 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, மகாராஜபுரம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு, தினமும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மருத்துவமனை அருகே உள்ள சாலையில் இருந்த பாதாள சாக்கடையில் கடந்த இரு தினங்களுக்கு முன் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறியது.
இது பற்றி அப்பகுதி மக்கள், நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், தற்போது, அந்த பாதாள சாக்கடை மேன்ேஹால் வழியாக வெளியேறும் கழிவுநீர் குளமாக பெருக்கெடுத்து, மருத்துவமனை அருகே தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'நகராட்சியில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், கழிவுநீர் அடைப்பை சரி செய்வதற்கான மோட்டார் பழுதாகியுள்ளதால் சீரமைக்க கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த மோட்டார்கள் வர தாமதமாவதால் பாதாள சாக்கடை அடைப்பு பிரச்னை சரி செய்ய தாமதமாகிறது. தற்போது, கழிவுநீரால் பிரச்னை ஏற்படாமல் இருக்க தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் மோட்டார் வந்தவுடன் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்' என்றனர்.