/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் வெளியேறும் பகுதிகளை கலெக்டர் ஆய்வு
/
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் வெளியேறும் பகுதிகளை கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் வெளியேறும் பகுதிகளை கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் வெளியேறும் பகுதிகளை கலெக்டர் ஆய்வு
ADDED : மார் 07, 2025 09:03 AM
விழுப்புரம் : விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மழை நீர் வெளியேற்றும் பகுதிகளை நேற்று காலை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார்.
பின், அவர் கூறியதாவது:
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட புதிய பஸ் நிலையத்தில் இருந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம், மழைநீர் வெளியேற்றும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தேங்கும் மழைநீர், இரண்டு 100 ஹெச்.பி., மின் மோட்டார் மூலம் பம்பிங் செய்யப்பட்டு, பாண்டின் நகரில் உள்ள மழைநீர் வாய்க்காலுக்கு கொண்டு செல்லும் பணி குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.
மேலும், மழைநீர் சாலாமேடு ஏரிக்கு செல்லும் வழித்தட வாய்க்கால் பகுதியும் ஆய்வு செய்யப்பட்டது. மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில், மழைநீர் வழித்தட வாய்க்கால் பகுதியினை முறையாக சீரமைத்து பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விராட்டிக்குப்பம், சாலாமேடு, வழுதரெட்டி, கா.குப்பம், எருமனந்தாங்கல் ஆகிய பகுதிகளில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.
கீழ்ப்பெரும்பாக்கத்தில் உள்ள நுாலகம் மற்றும் அறிவுசார் மையத்தின் செயல்பாடுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தார்.
ஆய்வின்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் மோகன், நகராட்சி கமிஷனர் வசந்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.