/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மரக்காணம் தடுப்பணை, கழுவெளி ஏரி பகுதிகளை கலெக்டர் பழனி ஆய்வு
/
மரக்காணம் தடுப்பணை, கழுவெளி ஏரி பகுதிகளை கலெக்டர் பழனி ஆய்வு
மரக்காணம் தடுப்பணை, கழுவெளி ஏரி பகுதிகளை கலெக்டர் பழனி ஆய்வு
மரக்காணம் தடுப்பணை, கழுவெளி ஏரி பகுதிகளை கலெக்டர் பழனி ஆய்வு
ADDED : ஆக 08, 2024 02:09 AM

மரக்காணம் : மரக்காணம் பகுதியில் மழையால் சேதமடைந்த பகுதிகளை கலெக்டர் பழனி ஆய்வு மேற்கொண்டார்.
மரக்காணம் பகுதியில் பருவ மழையின் போதும் வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் விதமாக சிறுவாடி, முருக்கேரி, ஆலத்துார், மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்ட தடுப்பனை குறித்து கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.
திண்டிவனம் - மரக்காணம் சாலையில் உள்ள சிறுவாடி கடை தெருவில் மழை நீர் தேங்குவதை தடுக்கவும், முருக்கேரி ஏரியை முழுமையாக துார்வாரி சரி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து கந்தாடு கிராமத்தில் கடந்த ஆண்டு பருவமழையின் போது ஏரி கரையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை ஊராட்சி ஒன்றிய நிதியின் மூலம் பருவமழை துவங்குவதற்கு முன் உடனடியாக கட்டுமான பணிகளை துவங்கிய சரிசெய்ய வேண்டும்.
வண்டிப்பாளையம் கழுவெளி ஏரி மத்தியில் செல்லும் சாலையை சீரமைக்கவும், பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் இருபுறமும் மணல்மேடுகளை உடனடியாக அமைத்து பருவமழைக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்ஷூ நிகம், மாவட்ட வன அலுவலர் சோமன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஷோபனா, தாசில்தார் பாலமுருகன், சேர்மன் தயாளன், மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்டபொறியாளர் உத்தண்டி, உதவி கோட்ட பொறியாளர் கவிதா, திண்டிவனம் உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் தீனதயாளன் உட்பட பலர் உடனிருந்தனர்.