/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மினி பஸ் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தகவல்
/
மினி பஸ் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தகவல்
மினி பஸ் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தகவல்
மினி பஸ் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தகவல்
ADDED : பிப் 28, 2025 05:31 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மினி பஸ் திட்டத்தில் பயன்பெற 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் மினி பஸ்சிற்கான கட்டண திருத்தம் மே 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. பழைய மினி பஸ் திட்டத்தின் கீழ் முன்பே அனுமதி பெற்ற உரிமையாளர்கள் இந்த புதிய திட்டத்தின் கீழ் மாறுவதற்கான விருப்பத்தை எழுத்து பூர்வமாக அளித்து அனுமதி சீட்டு ஒப்படைக்க வேண்டும்.
புதிய வழித்தடத்தில் குறைந்த பட்சம் 1.5 கி.மீ., கூடுதல் சேவை செய்யப்படாத பாதையாக இருக்க வேண்டும். மினி பஸ் இருக்கைகள் ஓட்டுநர், கண்டக்டர் இருக்கைகள் தவிர்த்து 25 ஆக இருக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக முன்பே தெரிவித்துள்ள 67 வழித்தடங்களுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி மார்ச் 31ம் தேதி என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விண்ணப்பதாரர்கள், பஸ்களை தயார் செய்து அனுமதி சீட்டு பெற கால அவகாசம் தேவைப்படுவதாலும், இத்திட்டம் மே 1ம் தேதிக்குள் நடைமுறைக்கு வர உள்ளதாலும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி முன்கூட்டியே அதாவது மாரச் 11ம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாவட்டத்தில் தற்போது 2வது கட்டமாக வெளியிடப்பட்டுள்ள 33 மினி பஸ்களின் வழித்தடங்களுக்கு அனுமதி வேண்டி மார்ச் 11ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விழுப்புரம், திண்டிவனம் ஆகிய வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் அளிக்க வேண்டும்.
மாவட்டத்தில் மினி பஸ் புதிய விரிவான திட்டம், வழித்தட வரைபடங்களுடன் கூடிய விண்ணப்பங்களை நிபந்தனைகளுக்கு உட்பட்டு அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

