/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருவக்கரை புவியியல் பூங்காவில் கலெக்டர் ஆய்வு
/
திருவக்கரை புவியியல் பூங்காவில் கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூலை 25, 2024 11:15 PM

வானுார்: திருவக்கரையில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புவியியல் பூங்காவை கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.
வானுார் அடுத்த திருவக்கரையில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அருங்காட்சியகம், நுாலகம் உள்ளிட்ட இதர வசதிகளுடன் கூடிய புவியியல் பூங்கா கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பூங்காவை நேற்று கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் கூறுகையில், 'இந்த பூங்கா 10 ஆயிரத்து 157 சதுர அடி பரப்பளவில் வரவேற்பு அறை, கேலரி, அலுவலகம், நுாலகம், அருங்காட்சியகம், திரையரங்கம், கோப்புகள் வைப்பறை, வாகனங்கள் நிறுத்தும் பகுதி மற்றும் கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் திறப்பு விழா நடைபெறும்.
இந்த பூங்காவில் கல்மரம் இருப்பது வரலாற்று நினைவு என்பதால் முறையாக பராமரித்திடவும், பொதுமக்கள் பார்வையிடும் போது எவ்வித பாதிப்பும் ஏற்படாதபடி தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.
ஆய்வின்போது, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், வானுார் ஊராட்சி ஒன்றிய சேர்மன் உஷா முரளி, தாசில்தார் நாராயணமூர்த்தி, பி.டி.ஓ.,க்கள் கார்த்திகேயன், தேவதாஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.