/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சமூக வலைதளத்தில் போலி தகவல்கள் பரப்பினால் கடும் நடவடிக்கை பாயும் கலெக்டர் எச்சரிக்கை
/
சமூக வலைதளத்தில் போலி தகவல்கள் பரப்பினால் கடும் நடவடிக்கை பாயும் கலெக்டர் எச்சரிக்கை
சமூக வலைதளத்தில் போலி தகவல்கள் பரப்பினால் கடும் நடவடிக்கை பாயும் கலெக்டர் எச்சரிக்கை
சமூக வலைதளத்தில் போலி தகவல்கள் பரப்பினால் கடும் நடவடிக்கை பாயும் கலெக்டர் எச்சரிக்கை
ADDED : ஆக 18, 2024 04:36 AM

விழுப்புரம் : சமூக வலைதளத்தில் வந்த போலியான செய்தியை பார்த்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு பெண்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது.
தமிழகத்தில் மகளிர் உரிமை திட்டத்தில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டோர், மேல்முறையீடு செய்யலாம் என பலர் இ-சேவை மையங்களில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்டோர் நேற்று 17ம் தேதி மற்றும் 18, 19 தேதிகளில் விண்ணப்பிக்க கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் விண்ணப்பம் பெறப்படுகிறது என வாட்ஸ் அப் மூலம் தகவல் பரவியது.
இதை நம்பி நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டனர். கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அப்படியொரு முகாம் ஏதும் கிடையாது என கூறியதும் பெண்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து, அந்த பெண்கள், பலமுறை விண்ணப்பித்தும் தகுதியுள்ள தங்களுக்கு உரிமைத் தொகை வழங்கவில்லை என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
வருவாய்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மகளிர் உரிமைத் தொகை சிறப்பு முகாம் நடைபெறுவதாக வாட்ஸ் ஆப் வதந்தியை பொதுமக்கள் நம்ப வோண்டாம் என நோட்டீஸ் ஓட்டிய பிறகு அனைவரும் கலைந்த சென்றனர்.
கலெக்டர் எச்சரிக்கை
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ., திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகங்களில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் முகாம் நடப்பதாக தவறான தகவல் சிலரால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.
இந்த தகவலை உண்மையென நம்பி பொதுமக்கள் யாரும் இந்த அலுவலகங்களுக்கு வர வேண்டாம். அரசின் நலத்திட்டங்கள் தொடர்பான முகாம் நடத்துவதாக இருந்தால் மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்படும். அரசு துறைகளால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி தவறான தகவல் பரப்புவோரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

