/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேளாண் அடுக்கு திட்டத்தில் பதிய விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுரை
/
வேளாண் அடுக்கு திட்டத்தில் பதிய விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுரை
வேளாண் அடுக்கு திட்டத்தில் பதிய விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுரை
வேளாண் அடுக்கு திட்டத்தில் பதிய விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுரை
ADDED : மார் 05, 2025 05:28 AM
விழுப்புரம்: விவசாயிகள், அரசு திட்டங்கள் பெற வேளாண் அடுக்கு திட்டத்தில் பதிந்து பயன்பெற கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
அரசு திட்டங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அனைத்து விபரங்களையும் மின்னணு முறையில் சேகரிக்க தமிழகத்தில் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகளின் பதிவு விபரங்களோடு, ஆதார், மொபைல் எண், நில உடைமை விபரங்களையும் விடுபாடின்றி இணைக்கும் பணி சம்மந்தப்பட்ட வருவாய் கிராமத்தில் நடக்கிறது.
பொது சேவை மையம் சென்று, அங்கும் நில உடைமை விபரங்கள் இணைத்த பின், அனைத்து விபரங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதார் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படுகிறது.
இந்த நிதியாண்டு முதல் பிரதமரின் கவுரவ நிதி திட்டம், பயிர் காப்பீடு திட்டம் ஆகிய மத்திய, மாநில அரசு திட்டங்களில் விவசாயிகள் எளிதாக பயன்பெற தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசிம்.
விவசாயிகள் தங்கள் கிராமங்களில் வேளாண் துறை அலுவலர்கள் மூலம் நடக்கும் சிறப்பு முகாம்கள், பொது சேவை மையங்களுக்கு சென்று தங்கள் நில உடைமை விபரங்கள், ஆதார், மொபைல் எண் விபரங்களை வழங்கி எந்தவித கட்டணமின்றி வரும் 31ம் தேதிக்குள் இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.