/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கல்லுாரி மாணவர்கள் போராட்டம் திண்டிவனத்தில் பரபரப்பு
/
கல்லுாரி மாணவர்கள் போராட்டம் திண்டிவனத்தில் பரபரப்பு
கல்லுாரி மாணவர்கள் போராட்டம் திண்டிவனத்தில் பரபரப்பு
கல்லுாரி மாணவர்கள் போராட்டம் திண்டிவனத்தில் பரபரப்பு
ADDED : ஜூன் 22, 2024 05:12 AM

திண்டிவனம், : திண்டிவனத்தில் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லுாரியில் ஷிப்டு முறையை ரத்து செய்ததை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லுாரியில் 3000 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். போதிய வகுப்பறை இல்லாததால் ஷிப்டு முறை கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் தற்போது, கல்லுாரியில் கூடுதலாக வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.
இதனால், கடந்த 19ம் தேதி முதல் கல்லுாரியில் ஷிப்டு முறை ரத்து செய்யப்பட்டு, ஒரே வேளையாக காலை 10:00 மணியிலிருந்து மாலை 4:00 மணி வரை வகுப்பு நடைபெறும் முறை அமலுக்கு வந்தது.
இந்நிலையில், நேற்று காலை 10:00 மணியளவில் கல்லுாரியைச் சேர்ந்த வணிகவியல் துறை மாணவர்கள் உள்ளிட்ட சிலர், கல்லுாரியில் மீண்டும் ஷிப்டு முறையை மீண்டும் கொண்டு வர வலியுறுத்தி கல்லுாரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு நிலவியது.
போராட்டம் நடத்திய மாணவர்களிடம், கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) நாராயணன் மற்றும் ரோஷணை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், அரசு உத்தரவின் பேரில்தான் ஷிப்டு முறை ரத்து செய்யப்பட்டது என மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.