/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாமி சிலைகள் சேதம்; 4 பேர் மீது புகார்
/
சாமி சிலைகள் சேதம்; 4 பேர் மீது புகார்
ADDED : ஏப் 26, 2024 11:56 PM
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள கோவிலை இடித்து அகற்றிய வனக்காவலர் உள்ளிட்ட 4 பேர் மீது கிராம மக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சிறுமதுரை கிராமத்தில் உள்ள மலட்டாற்றில் அக்கிராம மக்கள் அங்காளம்மன் சிலை வைத்து வழிபட்டு வந்தனர். இந்நிலையில் அக்கோவிலில் உள்ள அங்களாம்மன் சிலைகளை கடந்த மாதம் 16ம் தேதி மர்மநபர்கள் இடித்து சேதபடுத்தினர். இது சம்மந்தமாக அக்கிராம மக்கள் திருவெண்ணெய்நல்லுார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில் நேற்று மீண்டும் கோவிலில் இருந்து மீதமுள்ள சிலைகளை இடித்து வேலை பிடுங்கி ஆற்றில் வீசியுள்ளனர். விசாரணையில் வனக்காவலர் சக்திவேல் உட்பட 4 நபர்கள் கோவிலில் இருந்த சிலைகளை சேதப்படுத்தியது தெரியவந்தது.
இதையெடுத்து அக்கிராம மக்கள் இந்து முன்னணி மாவட்ட தலைவர் சதீஷ், மாவட்ட செயலாளர் தனபால் தலைமையில் கோவிலை சேதப்படுத்திய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று புகார் அளித்துள்ளனர்.

