/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உறுப்பினர்கள் கையெழுத்தில் மோசடி ஊராட்சி தலைவர் மீது புகார்
/
உறுப்பினர்கள் கையெழுத்தில் மோசடி ஊராட்சி தலைவர் மீது புகார்
உறுப்பினர்கள் கையெழுத்தில் மோசடி ஊராட்சி தலைவர் மீது புகார்
உறுப்பினர்கள் கையெழுத்தில் மோசடி ஊராட்சி தலைவர் மீது புகார்
ADDED : மே 10, 2024 01:03 AM

விழுப்புரம்: வார்டு உறுப்பினர்கள் கையெழுத்தை போலியாக போட்டு முறைகேடு செய்ததாக ஊராட்சி தலைவர் மீது விழுப்புரம் கலெக்டர், எஸ்.பி., அலுவலகங்களில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பஞ்சமாதேவி ஊராட்சி துணைத் தலைவர் ராஜேஸ்வரி, வார்டு உறுப்பினர்கள் கார்த்திகேயன், பிரியா ஆகியோர் நேற்று கலெக்டர், எஸ்.பி., அலுவலகங்களில் அளித்த புகார் மனு:
எங்கள் ஊராட்சியில் தலைவராக இருப்பவர், எங்களின் கையெழுத்துகளை தனிச்சையாக அவரே போட்டு தீர்மானம் மூலம் முறைகேடு செய்துள்ளார். டெண்டர் விடாமல் பணி செய்து அதற்கு ரசீது வாங்கியுள்ளார்.
இது பற்றி பல முறை புகார் அளித்தும் தீர்வில்லாததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த மார்ச் 15ம் தேதி வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சிகள் உதவி இயக்குனர், கலெக்டர் ஆகியோருக்கு நேரிலும், தபாலிலும் புகார் மனு அனுப்பினோம். ஆனால் தற்போது வரை விசாரணை நடத்தப்படவில்லை.
மேலும், இது பற்றி நாங்கள் வளவனுார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம். பதிவுத்துறை அலுவகலங்களுக்கும் பத்திரப்பதிவை நிறுத்தும்படி கடிதம் அனுப்பியுள்ளோம். கலெக்டர், எஸ்.பி., ஆகியோர் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.