/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பட்டியல் ஊராட்சி தலைவர்களுக்கு சம உரிமை மறுப்பதாக புகார்; மனு
/
பட்டியல் ஊராட்சி தலைவர்களுக்கு சம உரிமை மறுப்பதாக புகார்; மனு
பட்டியல் ஊராட்சி தலைவர்களுக்கு சம உரிமை மறுப்பதாக புகார்; மனு
பட்டியல் ஊராட்சி தலைவர்களுக்கு சம உரிமை மறுப்பதாக புகார்; மனு
ADDED : செப் 01, 2024 11:16 PM
விழுப்புரம் : பட்டியல் சமூக ஊராட்சி தலைவர்களுக்கு சம உரிமைகள், சமூக நீதி மறுக்கப்படுவதாக, எஸ்.சி., - எஸ்.டி., விழிப்பு கண்காணிப்பு குழு உறுப்பினர் அகத்தியன், முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
மனு விபரம்:
சமீப காலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான தனி ஊராட்சியிலும், பொது ஊராட்சியிலும் பட்டியல் சமூக தலைவர்கள் வென்று நிர்வாகம் செய்கின்றனர். இந்நிலையில், பட்டியல் சமூக ஊராட்சி தலைவர்களுக்கு பல மாவட்டங்களில் சம உரிமைகள், சமூக நீதி மறுக்கப்பட்டு வருகிறது.
ஊராட்சி தலைவர்களின் நிர்வாகத்தில் பட்டியலின தலைவர்கள், துணைத் தலைவர்கள் கேள்வி கேட்கக்கூடாது என்றும், அவர்களின் அதிகார பணியை நல்ல விதிமாக செய்ய முடியாதபடி, பிரச்னை தொடர்ந்து நடந்து வருகிறது.
இது போன்ற பிரச்னைகள் தொடர்பாக பட்டியலின தலைவர்கள், பி.டி.ஓ., ஊராட்சி உதவி இயக்குனர்கள், ஊரக வளர்ச்சி முகமை இயக்குனர்கள், கலெக்டர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்காத நிலை உள்ளது.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஊராட்சி தலைவர்களுக்கு சம உரிமை, சம அதிகாரம், நிர்வாக பணியை எந்தவித சிக்கலின்றி செய்ய தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி சமூக நீதியை காக்க, தமிழகத்தில் உள்ள அனைத்து கலெக்டர்களுக்கு, முதல்வர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.